அட்டன் வீதியில் திடீரென வெடிப்பு – போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்!
அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் நிலத்தாழிறக்கம் ஏற்பட்டதால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நிவ்வெளிகம பகுதியிலுள்ள பிரதான வீதியில் வெடிப்புகள் காணப்பட்டதையடுத்தே அவ்வீதியின் ஊடான போக்குவரத்துக்கு, பொலிஸார் தடைவிதித்தனர்.
காசல்ரி நிர்தேக்கத்தை அண்மித்த நிவ்வெளிகம குடியிருப்பு பகுதியில் , நிலம் தாழிறக்கம் ஏற்பட்டமையினால் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்டோர் அண்மையில் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த பகுதியிலுள்ள வீதியும் மூடப்பட்டுள்ளது. இதனால், அட்டன், பலாங்கொடை, பொகவந்தலா, மஸ்கெலியா ஒல்ட்டன் சாமிமலை பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்படுள்ளது.
வாகாண சாரதிகள் மஸ்கொலியா ஊடாக நோட்டன் பாதையையும், சாஞ்சிமலை வழியாக டிக்கோயா பாதையையும் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
மு.இராமச்சந்திரன்