முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பலர் விரைவில் கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் ஆகிய 12 பேருக்கு பிடியாணை பிறப்பித்து, அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் 29  ஆம் திகதி மற்றும் மார்ச்  31 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கசுன் பாலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் புஞ்ஜிஹேவா, புத்திக சரத்சந்திர,சங்கரப்பிள்ளை பதுமநாதன், இந்திக சமன்குமார ஆகியோர் தொடர்பிலும் பிடியாணை பெறுமாறு சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *