அரசியல் கைதிகள் குறித்து விக்கி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்!

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி 29 நாட்களாகத் தொடர்ச்சியா உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் நிலையில், அவர்களின் விடுதலைக்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

கைதடியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இது குறித்து வடக்கு முதலமைச்சர் தெரிவிக்கையில்,

“தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தித் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுடைய உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது. எனவே, அவர்களுடைய விடுதலை தொடர்பாகவும், அவர்களுடைய உயிர் பாதுகாப்பு தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது.

இதனடிப்படையில் நேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசியஅமைப்பின் தலைவர் அருட்திரு எம்.சக்திவேல் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்தித்துப் பேசியிருந்தார்கள். இதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறும்”- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *