பெலவத்தையில் தீவிபத்து – விமானப்படையும் குதிப்பு

பத்தரமுல்ல – பெலவத்த பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விமானப்படையும் இறங்கியுள்ளது.

இதற்காக விமானப்படையின் ‘பெல் -212’ உலங்கு வானூர்த்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீயணைப்பு படையினரும், தீயைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில்பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

https://www.facebook.com/Puthusudar.lk/videos/732376137161271/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *