மூடிய அறைக்குள் துள்ளிக்குதிக்காது சம்பளப் பிரச்சினையை சபைக்கு கொண்டுவாருங்கள் – தொண்டாவுக்கு திலகர் சவால்!

அறைக்குள் இடம்பெறும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையில் நாங்காலியை உதைத்து காட்டிய கோபத்தை ஊடகத்தில் கூறுகிறீர்கள்.  ஆனால் வெளியில் உங்கள் மைத்துனர் ஆறுலட்சம் லஞ்சம் வாங்கிய செய்தி வெளியே வராமல் பாரத்துக் கொள்கிறீர்கள். எனவே பேச்சுவாரத்கை குறித்து நீங்கள் ஆடும் ஊடக நாடகத்தை நம்ப முடியாது.

ஊடகங்களிடம் கேட்ட ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள கோரிக்கையை குறைந்த பட்ச வேதன சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் பிரேரணையாக முடியுமானால் கொண்டுவாருங்கள்.  அதற்கு நீங்கள் முதலில்  பாராளுமன்றத்துக்கு வாருங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெல0pயா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமாளக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டங்கள் மீதான விசாதம் நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடரந்தும் உரையாற்றுகையில்,
இன்று முன்வைக்கப்பட்டிருக்கும் இரண்டு சட்டங்களும் பெருந்தோட்டக் கைத்தொழிலோடு தொடர்புடையவை. இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் க்ளைபோசைட் பாவனையை பெருந்தோட்டப் பகுதியில் மாத்திரம் எதிர்வரும் 36 மாதத்திற்கு பாவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான அனுமதியை பாராளுமன்றத்திலும் இந்த ஒழு ங்கு விதி கோரி நிற்கின்றது.
இப்படி மருந்து பாவனைக்கு கூட அமைச்சரவை அனுமதியையும் பாராளுமன்ற அனுமதியையும் கோரி நிற்கும் போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயம் தொடர்பில் நாங்கள் பாராளுமன்றில் என்னதான் கூக்குரலிட்டாலும் இந்த பாராளுமன்றம் பாராமுகமாகவே உள்ளது.
காரணம் கடந்த 25 ஆண்டுகளளாக அரசுக்கும் அரசாங்கதம்துக்கும் பாராளுமன்றத்துக்கும் பொறுப்ப கூற தேவையற்ற் விதத்தில் கூட:டு ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் தேயிலைத் தோட்டங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகும்.  குமபளிகள் தான்தோன்றித்தனமாக பிரதான ஏற்றமதி பயிர்களான தேயிலை, ரப்பர், தென்னை பயிர்களை விட்டு வேறு முறைசாரா வகையில் தமது லாபத்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இதனால் குறித்த தேயிலை ரப்பர் தெற்கு பொருட்களின் ஏற்றுமதி பெருமளிவில் வீழ்ச்சியடைநதுள்ளமையையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.  இது பற்றி பேசுவதற்கு பதிலாக தோட்டத் தொழிலாளர்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டுமே இது பாரக்கப்படுகிறதே தவிர நாட்டின் பொருளாதார பிரச்சினையாக பார்க்க மறுக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழி;சங்கங்ளில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் இந்த விடயத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவுள்ளதாக ஊடகங்களுக்கு கூறியுள்ளார். பாராளுமன்றில் பிரேரணையை கொண்டு வாருங்கள். அதற்கு நீங்கள் முதலலி; பாராளுமன்றம் வாருங்கள்.
தேசிய குறைந்த பட்ச வேதனச் சட்டத்தை படியங்கள் அதில் காட்டப்பட்டுள்ள குறைந்த பட்ச சம்பளம் நானூறு ரூபாய் என்பதை காரணம் காட்டியே கம்பனிகார்கள் உங்களை ஏமாற்றி வருகிறார்கள. சட்டத்தின் பிற்பகுதியிலே வாழ்க்கைச் செலவுப் படி  விஸேட வாழ்க்கைச் செலவுப்படி என்பவற்றையெல்லாம் உள்ளடக்கி குறைந்த பட்ச வேதனம் அமைய வே;ணடும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி கேட்டால் நீங்கள் ஊடகங்களிடம் கேட்ட ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை கேட்டுப் பெற நாங்கள் ஆதரவு தர தயாராகவே உள்ளோம்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற நீங்கள் நிலுவைப்பணம் பெற்று;கொடுக்க முடியாமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி இடைக்கால கொடுப்பனவை பெற்று;ககொடுத்தது தான் காரணம் என மக்களிடம் கூறுpகன்றிPர்கள். ஆனால் நீதிமன்றத்திற்கு அறிக்கை இடும்போது  நிலுவைப்பணம் வழங்கப்படNவுண்டும் என்றோ உரிய கால இடைவெளியில்
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவேண்டும் என்றோ கட்டாயம் இல்லை என கூறுகிறீர்கள். இவ்வாறு மக்களிடம் ஒன்றும் நீதிமன்றிடம் ஒன்றும் ஊடகங்களிடம் ஒன்றும் என பேசி மக்களை குழப்பாதீர்கள்.
மூடிய அறையில் சம்பளம் போதாது என நீங்கள் நாங்காலியை உதைத்து விட்டு வருவதானால் அந்த நாற்காலிக்கு வலிக்கிறதோ இல்லையோ அந்த பேச்சுவாரத்தையில் என்ன நடந்தது என எதிர்பாரத்து காத்திருக்கும் தொழிலாளர் மக்களுக்கு வலிக்கிறது. மூடிய அறையில் நீங்கள்  நாற்காலியை உதைத்து வெளியேறிது  விலாவாரியாக ஊடகங்களில் வருகிறது. வெளியே வந்து முதலாம் கட்ட தோல்வி, இரண்டாம் கட்ட தோல்வி, மூன்றாம் கட்ட தோல்வி என நீங்கள் அடுக்கும் கதைகள் அடுக்கடுக்காக வருகின்றன. ஆனால் உங்கள் மைத்துனர் முத்துவிநாயகத் தொண்டமான் ஆறலட்சம் லங்சம் வாங்கி கைதுசெய்த செய்தி வெளியே வராமல் பார்த்துகொள்கிறீர்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *