“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிட்டுமா?” – நாமலிடம் சிறிதரன் நேரில் கேள்வி

“ உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல்தீர்வை வழங்க தயாரா? அதற்கான உத்தரவாதத்தை வழங்கமுடியுமா” – என்று நாமல் ராஜபக்ச எம்.பியிடம் நேற்று நேரில் வினா தொடுத்தார் சிறிதரன் எம்.பி.
 

நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.
 
சபைஒத்திவைப்புவேளைபிரேரணைமீதான விவாதத்தின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சிறிதரன் எம்.பி. உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய நாமல் எம்.பி,
 
“ கைதிகள் பற்றி கதைக்கின்றீர்கள். அவர்களை விடுவிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? அரசின் பிரதியமைச்சர் ஒருவர் கைதாகி அரைமணிநேரத்துக்குள் பிணையில் வருகிறார். சிறைக்கைதிகளை பிணையில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்குக்கு சென்று உறுதியளித்தீர்கள். நான்கரை வருடங்களில் என்ன நடந்துள்ளது” என்று வினவினார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீதரன் எம்.பி.,
 
“ இந்த கேள்வியை நாமல் எம்.பி. அரசிடம்தான் கேட்கவேண்டம். வஞ்சிக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், சிறைக்குள் போராடும் எம் இளைஞர்களின் சார்பிலும்தான் நான் கருத்துகளை முன்வைக்கின்றேன்.
மீண்டும் குறுக்கீடு செய்த நாமல்,
 
“ கூட்டமைப்பு எம்.பி. அரசை விமர்சிப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. வடக்குக்கு சென்று ஒன்றையும், அரசிடம் வந்துவேறொன்றையும் பேசும் நிலை மாறவேண்டும்” என்றார்.
 
“ நீங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர்தான் கைதிகளின் வலி உங்களுக்கு புரிகின்றது. அன்று சொன்னதைத்தான் இன்றும் நாம் சொல்கின்றோம். எங்கள் காணிகளை விடுவியுங்கள். காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வை தாருங்கள். அரசியல்தீர்வை முன்வையுங்கள். இவையே எமது கோரிக்கையாகும்.
 
உங்கள் தந்தை ஆட்சியில்இருக்கும்போது சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்திருக்கலாம். எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒன்றையும் ஆட்சிக்கு வந்த பின்னர் வேறொன்றை செய்வதுமே இலங்கையில் அரசியல் கோட்பாடாக மாறியுள்ளது.
 
உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் வடக்கு, கிழக்கு இணைந்த மண்ணில் அரசியல்தீர்வை முன்வைக்கவும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் தயாரா? அதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியுமா? நல்லவர் வல்லவர் போல் பேசுவதில் மட்டும் பயன் இல்லை.
 
வடக்கு, கிழக்கு இணைந்த மண்ணில்அரசியல்தீர்வை – முழு அரசியல்ரைகதிகளை – காணாமல் ஆகக்க தயாரப? சுட்டிக்கொன்றவர்களும் அவர்கள்தான். நல்லவர்போல் பேசமுடியாது. உங்கள் தந்தையும், சத்தப்பாவும்தான் இனப்படுகொலை செய்தனர். அதில் உங்களுக்கும் பங்கிருக்கின்றது. அதை மூடிமறைக்கும் வகையில் பேசக்கூடாது” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *