மக்களே அவதானம்! இன்றும் நாளையும் கடும் மழை!! சில பிரதேசங்ககளில் மண் சரிவு அபாயம்!!!

தற்போது நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய கடும் மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்தின் உள்ளகப் பகுதிகளிலும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துககொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் சில பிரதேசங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி பதுளை மற்றும் பஸ்ஸர அகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *