காட்டுக்குரங்கின் சேட்டையால் பாட்டி பலி! மாத்தளையில் துயர் சம்பவம்

குரங்கின் சேட்டையால் பாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த துயர் சம்பவமொன்று மாத்தளையில் இன்று இடம்பெற்றுள்ளது.73 வயதுடைய திலக்கா ரஞ்சனி என்பவரே உயிரிழந்தவராவார்.


குறித்த பாட்டி, வீட்டு முற்றத்தில் இருக்கும் போது – அருகில் இருந்த தென்னை மரத்தில் ஏறிய காட்டுக் குரங்கொன்று, தேங்காயொன்றை பறித்துள்ளது.


இவ்வாறு பறித்த தேங்காயை கீழே நின்றுக்கொண்டிருந்த பாட்டியின் தலையில் குரங்கு போட்டுள்ளது. இதனால் மயங்கிவிழுந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *