5 மாதங்களுக்குள் 180 பலஸ்தீனர்கள் கொலை!

2018- ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், இஸ்ரேல் படைகளால் 180 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

70 வருடங்களுக்கு முன்னர் வௌியேற்றப்பட்ட தமது சொந்த நிலங்களுக்கும், வீடுகளுக்கும் செல்ல தம்மை அனுமதிக்க வேண்டுமென கோரி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக காஸா எல்லையில் பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தி வருகின்றது.

இதில் 180 பேர் கொல்லப்பட்டதுடன் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *