நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிரடி நடவடிக்கை
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலத்தை திட்டமிட்டு துண்டு துண்டாகப்பிரிப்பற்கு கிழக்கு மாகாண பிராந்திய பொது முகாமையாளர் பல மாதங்களாக நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றார்.
இதில் ஒரு அங்கமாக நேற்று அக்கரைப்பற்று பிராந்தியக்காரியாலத்திற்குச் சொந்தமான இரண்டு வாகனங்களை கல்முனை பிராந்தியக் காரியாலத்திற்கு கையளிக்குமாறு பணித்துள்ளார்.
இது மாத்திரமல்ல நிருவாகப் பொறியளாளரை அக்கரைப்பற்று பிராந்தியக்காரியாலயதினை விட்டு அம்பாரைக்காரியாலயத்திற்கு சென்று பணிபுரியுமாறும் பணித்துள்ளார்.
அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயமானது சுமார் 80,000க்கும் மேல் நீரிணைப்பிணை வைத்துக்கொண்டு மருதமுனை தொடக்கம் பாணமை வரையான கரையோர பிரதேச பிராந்தியக் காரியாலயமாக சிறப்பாக இயங்கி வருகின்றதென்பது நாம் எல்லோரும் அறிந்ததொன்று,
இது சம்பந்தமாக நேற்று முன்தினம் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் அக்ரைப்பற்று அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஏ.எல்.தவத்தை சந்தித்துப மேற்படி விடயம் சம்பந்தமாகவும் மேலும் தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற காலங்களில் இவ்வாறான விடையங்கள் கட்சியின் வீழ்சிக்கு வழிவக்கும் என்பது தொடர்பாகவும் நீண்ட நேரம் பேசப்பட்ட போது தனக்கு இது தொடர்பாகத் தெரியாதென்றும் இதனை ஒரு சில தினங்களுக்குள் தலைவருடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பேசி நிரந்தரத் தீர்வொன்றினை பொற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இர்சாத்