கோட்டாவால் அது முடியாது! – உறவினரான வெல்கமவே வெட்டு
“அமெரிக்கப் பிரஜையொருவரால் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, அது பற்றி கதைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.”
– இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ 2020இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிடுவார் எனக் கூறப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ஷவையே நான் விரும்புகின்றேன். சட்ட சிக்கலைச் சமாளித்து அவர் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். குடும்ப ஆட்சிக்கு நான் என்றும் ஆதரவு தெரிவிப்பதில்லை” – என்றார்.
கோட்டாபய ராஜபக்ஷவும் குமார வெல்கமவும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.