பாடசாலைகளிலும் பரிணாமிக்கும் “நஞ்சற்ற நாடு”

நச்சுத்தன்மையற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில், அரசாங்கம் தனது உதயத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கங்களையும், மக்கள் நலன் செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருவதில் அதி முக்கியத்தும் கொடுத்துவருகின்றமை எம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்.

இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நச்சுத்தன்மையற்ற நாடு செயற்றிட்டத்தின் அடித்தளம் மக்களுக்கு தீணி போடுகின்றோம் என்ற போர்வையில் தீமையை செய்து கொண்டிருக்கும் “கிளைபோசெட்” ஐ தடை செய்தமையே!

உண்மையிலேயே இத் திட்டனைக் கொண்டுவருவதில் உறுதியாக இருந்து, இத் திட்டத்துக்கு வித்திட்டவர் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ஹாமதுரு என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது. இதே நேரம் இத்திட்டம் வகுக்கப்பட்டு இதுவரையில் இரண்டு முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதில் முன்னாள் விவசாய அமைச்சராக இருந்த எஸ்.பி. திஸாநாயக்கவும் இத்திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார். அதை விடவும் சிறப்பாகவும், வேகமாகவும் தற்போதைய அமைச்சர் மஹிந்த அமரவீர செயற்பட்டு வருகின்றார்.
நாம் உண்ணும் உணவில் காபோஹைதரேட்டு, புரதம், கல்சியம் இருக்கின்றதோ இல்லையோ!, நஞ்சு மட்டும் இருப்பது உறுதி. எவ்வாறென்றால் மரக்குற்றியை வண்டரிப்பதைப் போன்றே தற்கால விவசாயத்தில் நஞ்சின் கலப்படம் செ;லவாக்கு செலுத்துகின்றது.

நாளுக்கு நாள் புற்றுநோய்கள், சிறுநீரக நோய்கள், இன்னும் இன்னோரண்ண பல்வேறு நோய்கள் உலாவந்து கொண்டிருப்பதும் எமது நாட்டில் இன்று பிடித்திருக்கின்ற ஒரு துரதிஷ்ட நிலைதான், இது போதாதென்று உடல் வலிமை குறைந்த இளைஞர்களாகவே தற்கால இளைஞர்களின் உடல் நிலை மாறிக் கொண்டுவருகின்றது.
இவற்றுக்கெல்லாம் காரணம் தற்காலத்தில் வளர்ந்துள்ள நவீனத்தின் சோம்பேறித்தனம் என்றே கூறவேண்டும். அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு, இருந்த இடத்திலிருந்த நகராமல் சாதிக்கும் நவீனங்களை நஞ்சுகளை விதைக்கின்றன. அந்த வகையில் விவசாயத்தை விரைவுபடுத்துகின்Nறூம் அதிக விளைச்சளை காட்டுகின்றோம் என்ற மாயாஜாலையில் கடந்த அரசாங்கத்தின் உறவினால் அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிடப்பட்ட நிலைமையே இந்த ‘கிளைபோசெட்’.

இது மாத்திரமல்லாது இந்த ‘கிளைபோசெட்’ உரம் என்பது பல்வேறு கலப்புகளின் மூலக்கூறுகளில் உள்ளடங்கிய இராசாயன உரமாகும் இதன் பிரதிபலன் பலர் இதனை விலைகொடுத்து வாங்கி தங்களுக்கு தாங்களே நஞ்சைத் திணிக்கின்றனர்.
இருந்தபோதிலும் இந் நிலைமையில் அக்கால அரசாங்கமே இவ்வாறான தீமையை தீட்டியவர்கள் என்றுதான் கூற வேண்டும்.
ஆனால், தற்போதைய அரசாங்கத்துக்கு எவ்வாறான விமர்சனங்கள் இருந்தாலும், “நச்சுத் தன்மையற்ற நாடு” திட்டம் எவ்வித விமர்சனங்களுக்குள் கொண்டுசெல்ல முடியாததே, 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இது இன்று வரை பல அடைவு மட்டங்களை அடைந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களுக்கும், பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்ட இத் திட்டம் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு முன்னரிருந்து பாடசாலைகளுக்குள்ளும் உள்வாங்கப்பட்டது. அவ்வாறு பாடசாலைகளுக்குள் உட்புகுத்தியமை இத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பையும், வெற்றியையும் கண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது ஒவ்வொரு பாடசாலைகளிலும் தற்போது நஞ்சு இல்லாத இயற்கை விவசாய பயிர்கள் அறுவடைக்கான காலத்தை எட்டியுள்ளதுடன் அவை அறுவடை செய்யப்பட்ட அறிக்கைகளும், விளைச்சல்களும் வினைத்திறன் மிக்கதாகவே அமைந்துள்ளது.

இதனடிப்படையில் அண்மையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்திலும் “நச்சுத் தன்மையற்ற நாடு” தொனிப்பொருளின் ஒரு கட்ட செயற்றிட்டம் பூர்த்தி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டது.

அவ்வாறு இது மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவ்வாறான இயற்கையின் வினைத்திறனையும், இத் திட்டத்தினை பாடசாலை சமூகங்கள் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டியதும் இன்றியமைதாததாகும்.

எனவே, நாட்டில் செழிப்பில் பங்காளர்களாக அரசின் “நஞ்சற்ற நாடு” வேலைத் திட்டத்தை மனமுவர்ந்து செய்து எமக்கும், எமது சந்ததியினருக்கும் சுகாதாரமன தேகரோக்கியத்தை நிலைநாட்டுவோம்!.

~ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *