சர்வதேச நிதிச் சஞ்சிகையிடமிருந்து இரட்டை விருது வென்ற கொமர்ஷல் வங்கி

உலகப் புகழ் பெற்ற சர்வதேச நிதி சஞ்சிகையால் (IFM) கொமர்ஷல் வங்கிக்கு இலங்கையின் சிறந்த உள்நாட்டு வங்கி மற்றும் இலங்கையின் சிறந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான (SME) வங்கி என இரண்டு கீர்த்திமிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

2017 நிதி ஆண்டில் வங்கியின் இலாபத்தன்மை, அளவு, வருமானம், சொத்து மற்றும் அதனோடு தொடர்புடைய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சிறந்த உள்நாட்டு வங்கிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆண்டில் வங்கியின் மொத்த சொத்து 1.143 டிரில்லியன்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதே காலப் பகுதியில் மொத்த வருமானம் 115.6 பில்லியன்கள், தேறிய இலாபம் 16.5 பில்லியன்கள், வைப்புத் தளம் 850.1 பில்லியன்கள், மொத்தக் கடன்களும் பெறுகைகளும் 754.7 பில்லியன்களாகப் பதிவாகி உள்ளன.

சிறந்த SME வங்கிக்கான விருது நாட்டின் SME பிரிவுக்கு வங்கி வழங்கி வரும் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.

SME பிரிவுக்கு வங்கி வழங்கியுள்ள கடன்கள், வங்கி நடத்தி வரும் ஆற்றல் கட்டமைப்பு செயலமர்வுகள் மூலம் ளுஆநு பிரிவினரின் அறிவு மேம்பாட்டிற்கு வங்கி வழங்கி வரும் பங்களிப்பு என்பனவற்றைக் கருத்திற் கொண்டு இந்தத் தெரிவு இடம் பெற்றுள்ளது.

இலங்கையில் SME பிரிவுக்கு ஆகக் கூடுதலான கடன்களை வழங்கும் வங்கியாக கொமர்ஷல் வங்கி காணப்படுகின்றமையும் இந்த விருதின் போது கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

2017ல் மட்டும் இந்தப் பிரிவுக்கு 130 பில்லியன்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளன. வர்த்தகம் விவசாயம் பாற்பண்ணை, பண்ணை, கைத்தொழில் என பல பிரிவுகளில் இந்தக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வங்கியின் கிராமப் பகுதி கிளைகளில் செயற்படும் 16 விவசாய மற்றும் நுண் நிதிப்பிரிவுகளைச் சேர்ந்த 20 அதிகாரிகள் இந்த துறை சார்ந்தவர்களுக்கு அறிவூட்டல், கடன்களை வழங்கல், கடன்களை மீளச் செலுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கல் என பல சேவைகளை வழங்கி வருகின்றனர். வங்கியின் ‘பிஸ் கிளப்’ வலையமைப்பானது இத்தகைய தொழில்முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு அமர்வாகச் செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு பல புதிய வாய்ப்புக்களும் கிடைக்கின்றன.

வங்கி இந்தப் பிரிவில் சிறந்த வங்கிக்கு உரிய விருதுக்கு தெரிவாக இதுவும் ஒரு காரணமாகும்.
தொடர்ந்து மூன்றாவது வருடமாக சர்வதேச சஞ்சிகையால் கொமர்ஷல் வங்கிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 2016ல் நாட்டின் சிறந்த ளுஆநு வங்கியாக கொமர்ஷல் வங்கியை இந்த சஞ்சிகை தெரிவு செய்தது. 2017ல் நாட்டின் சிறந்த பசுமை வங்கியாகவும், சிறந்த தனியார் வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

‘இன்டர்நேஷனல் பினான்ஸ்’ அல்லது சர்வதேச நிதி சஞ்சிகை தொழில்துறை திறமைகள், தலைமைத்துவ ஆற்றல், தொழில்துறை தேறிய பெறுமதி, ஆற்றல் என்பனவற்றை சர்வதேச மட்டத்தில் மதிப்பீடு செய்தே விருதுக்கு உரியவர்களைத் தெரிவு செய்கின்றது. தகுதியான ஒரு ஆய்வுக் குழுவால் இவை மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதன் பின்னரே விண்ணப்பதாரிகள் அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் ஸ்திரப்பாடு என்பனவற்றின் அடிப்படையில் விருதுக்காகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

சர்வதேச நிதி சஞ்சிகையானது உலகின் முன்னணி நிதி மற்றும் வியாயார மதிப்பீட்டு சஞ்சிகையாகும். பிரிட்டனின் சர்வதேச வெளியீட்டகம் இதனை வெளியிடுகின்றது. வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புக்கள், சர்வதேச நிதி தொடர்பான செய்திகள், தொழில்துறை விற்பன்னர்களிடம் இருந்து அவை பற்றிய விரிவான ஆய்வுகள் மற்றும் விமர்சனங்கள், துறைசார் எழுத்தாளர்களிடம் இருந்து பங்களிப்புக்கள் என்பனவற்றில் கவனம் செலுத்தி இந்த சஞ்சிகை வெளியிடப் படுகின்றது.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 262 கிளைகளுடனும், 780 யுவுஆ வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018ன் முதல் ஆறு மாத காலத்தில மட்டும்; 16 சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியு டோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *