பஸ் கட்டணம் மீண்டும் உயரும் அறிகுறி!
பஸ்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசு சாதகமான பதிலொன்றை வழங்காவிட்டால் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அகில இலங்கை தனியார் பஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவை எடுப்பதற்காக அச்சங்கத்தின் முக்கிய கூட்டமொன்று நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என்று சங்கத்தின் ஊடகச் செயலாளரான அஞ்சன ப்ரியஞ்சித் தெரிவித்தார்.
அதேவேளை, இப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக்காண அரசு கால அவகாசம் கோரியுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு தெரிவித்தார்.
அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. ஆரம்பக் கட்டணமானது 10 ரூபாவிலிருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.