பிரித்தானியாவின் இராஜாங்க செயலாளர் பதவிக்கு ரணில் நியமனம்!

சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளராக கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கையருமான ரணில் மல்கம் ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.

மே 2020 முதல் செப்டம்பர் 2022 வரை, ரணில் மால்கம் ஜெயவர்த்தன பிரிட்டனின் சர்வதேச வர்த்தக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பிறந்த ரணில் ஜயவர்தன 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வடகிழக்கு ஹம்ப்ஷயரை பிரதிநிதித்துவப்படுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மே 8, 2015 அன்று நடைபெற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் 35,573 வாக்குகளைப் பெற்று பிரித்தானிய பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2017 பொதுத் தேர்தலிலும் ஜனவரி 2020 தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *