தேசிய காப்புறுதி தினக் கொண்டாட்டம்

இலங்கையின் காப்புறுதித் துறையினர், செப்டம்பர் மாதம் முதலாம் திகதி, தேசிய காப்புறுதி தின நிகழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் ஒன்று சேர்ந்திருந்தனர்.
அவர்களின் தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இலங்கை காப்புறுதிச் சங்கத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தன.
இவை நாட்டின் பல்வேறு பகுதிகளையும் உள்ளடக்கியதாக, 07 முக்கிய இடங்களில் இடம்பெற்றன. நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த அனைத்துப் பிரசைகளும் இது தொடர்பான அறிவைப் பெறுவது இதன் நோக்கமாகும்.
இந்த நடவடிக்கை, கொழும்பு, கண்டி, குருநாகல், யாழ்ப்பாணம், இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் SLIC, HNB அசூரன்ஸ், யூனியன் அஷ{ரன்ஸ், ஆர்பிகோ இன்ஷூரன்ஸ் பிஎல்சி, AIA இன்ஷூரன்ஸ் மற்றும் பெயார்பெஸ்ட் இன்சூரன்ஸ், அலியான்ஸ் இன்சூரன்ஸ் மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றினால் முறையே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஒவ்வொரு நிறுவனத்தினாலும், நூற்றுக்கணக்கான காப்புறுதி ஆலோசகர்கள் இந்த இடங்களில் ஒன்றிணைந்து தேசிய காப்புறுதி தினத்தை ஒரு தொழில்துறையாக் கூட்டாகக் கொண்டாடியுள்ளனர்.
செப்டம்பர் முதலாம் திகதி தேசிய காப்புறுதி தினம், கடந்த வருடம் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இது காப்புறுதித்துறை அடைந்துள்ள மாபெரும் மைற்கல்லாகும்.
இலங்கை மக்களிடையே காப்புறுதியின் பெறுமதியை அறிவுறுத்தி, பெருந்தொகையான மக்களுக்கு, குறைந்தபட்சம் சாதாரண காப்புறுதி ஒன்றையாவது பெற்று அவர்களதும், அவர்களின் அன்புக்குரியோரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தேசிய காப்புறுதி தினத்தின் பிரதான நோக்கமாகும். திடீர் விபத்துக்களினால் பாதிக்கப்படுவோருக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ள வேண்டிய நிவாரண சுமையை குறைப்பது இந்த நடவடிக்கையின் மற்றுமொரு நோக்கமாகும். இதன் மூலம் அரசாங்கத்தின் நலனுக்காகவும், மக்களின் நன்மை கருதியும் செயற்படும் வாய்ப்பு காப்புறுதி நிறுவனங்களுக்குக் கிடைக்கிறது.
காப்புறுதி துறையினால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பையும் இதன் மூலம் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.
2018 ஆம் ஆண்டின் தேசிய காப்புறுதி தினம், காப்புறுதித் துறையினர் மற்றும் பொது மக்களின் பெருமளவு ஈடுபாட்டை அவதானித்துள்ளன. ஐயுளுடு மற்றும் ஆளுகு நிறுவனங்களின் செயற்பாடுகள் இதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தன.
ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் உரைநிகழ்த்திய இலங்கை காப்புறுதிச் சட்டங்கள் ஆணைக்குழுவின் ஆராய்ச்சிப் பிரிவுப் பணிப்பாளர்களில் ஒருவரான சுதீர சேனாரத்ன,
‘கடந்த வருடம் அரசாங்கம் தேசிய காப்புறுதி தினத்தை செப்டம்பர் மாதம் முதலாம் திகதி பிரகடனம் செய்தமைக்கு IASL மற்றும் IRCSL இன் பங்களிப்பு வழங்கியது’ என்று கூறினார்.

நிகழ்ச்சிகளின் இறுதியில் காப்புறுதித் துறை சத்தியப்பிரமானம் கூறி, அங்கு கலந்துகொண்ட காப்புறுதி ஆலோசகர்கள் பல வர்ணங்களினாலான ரீ ஷேட்களில் தங்கள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, இலக்குகளை அடைந்துகொள்ள செயற்படுகின்றனர்.
படம்
0957 – திரு. சுதீர சேனாரத்ன – இலங்கை காப்புறுதி சட்டதிட்டங்கள் ஆணைக்குழுவின் ஆராய்ச்சிப் பணிப்பாளர் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் காட்சி
0967 – இலங்கை காப்புறுதி சங்கத்தின் தலைவர் திரு. தீப்தி லொக்குஆரச்சியின் உரை
0983 – காப்புறுதி ஆலோசகர்கள் தங்களது சம்பிரதாயபூர்வமான சத்தியப்பிரமானத்தை எடுக்கும் காட்சி
1915(1) – காப்புறுதி ஆலோசகர்கள் சம்பிரதானபூர்வமாக காப்புறுதி சத்தியப்பிரதானத்தை எடுக்கும் காட்சி
