மைத்திரியை சீண்டும் நாமல்! கஜுவால் வெடிக்கிறது மோதல்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கலாய்க்கும் வகையில் மஹிந்தவின் மகனான நாமல் ராஜபகஷ  எம்.பி., தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் படத்துடன் தகவலொன்றை பதிவிட்டுள்ளார். இப்பதிவானது தற்போது அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட கஜு (மரமுந்திரிகை) தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

“ குறித்த விமானத்தில் வழங்கப்படும் கஜுவை நாய்கூட சாப்பிடமுடியாது. அந்தளவுக்கு அது மோசமாக உள்ளது. இதை எல்லாம் அனுமதிப்பது யார்” என கேட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இவ்வறிவிப்பால் கலக்கமடைந்த விமானநிறுவனம், உயர்மட்டக்கூட்டத்தை அவசரமாகக்கூட்டிய முக்கிய முடிவெடுத்திருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரியை கலாய்க்கும் வகையில் தனது சகாவுடன் விமானத்திலிருந்து கஜு வைத்திருப்பதுபோல் படமெடுத்து அதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நாமல் எம்.பி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *