20 அடி உயரமான பிள்ளையார்!

இந்துக்களின் கடவுளான விநாயகரின் சதுர்த்தி இன்று (வியாழக்கிழமை), இந்து மக்கள் பரவி வாழும் நாடெங்கும் விமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

20 அடி உயரமான பிள்ளையார்!

குறிப்பாக டெல்லியின் பூரிக் கடற்கரையில், பிரபல சிற்பி சுதர்சன் பட்நாயக் 20 அடி உருவம் பதிந்த விநாயகர் சிலை ஒன்றை உருவாக்கியுள்ளார். விநாயகர் சதுர்த்தி இந்தியாவிலேயே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விரதத்திற்கு முன்னதாகவே பிள்ளையார் சிலைகளை அமைத்து பிரம்மாண்ட தயார்படுத்தல்களை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று முழுவதும் விரதமிருந்து, விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து, அவற்றை ஆற்றில் கரைக்கும் வழக்கம், வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர். அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள் நீங்கும். வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும். வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும். மாதுளை இலையால் வழிபட நற்புகழ் அடைவர். கண்டங்கத்தரி இலையால் வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

எனவே இன்றைய நாளில் மிகப் பெரிய விநாயகர் சிலைகளை உருவாக்கி அல்லது கடைகளில் பெற்று, அவற்றிற்கு அர்ச்சனைகள் செய்து பின்னர் அவை ஆற்றில் கரைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *