ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய மாநாடு! – தலைமைப் பதவிகளுக்கும் தேர்தல்

2018 (ஹிஜ்ரி 1440) ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி பொல்கொல்லயிலுள்ள NICD மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 1,600 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
கடந்த வருட செயற்பாட்டு அறிக்கைகள். இரு உதவித் தலைவர்களுக்கான தேர்தல், மத்திய மஜ்லிஸுஷ் ஷூரா அங்கத்தவர்கள் (மத்திய சபை அங்கத்தவர்கள்) தெரிவு, அங்கத்தவர் கருத்துரை, விடைபெறும் தலைவரின் விஷேட உரை மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெறவுள்ள இம்மாநாட்டில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவரைத் (அமீர்) தெரிவு செய்வதற்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. தெரிவுகள் அனைத்தும் இரகசிய வாக்கெடுப்பு மூலமே நடைபெறும்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த 24 வருடங்களாக பணியாற்றி அதனை சிறப்பாக வழிநடத்தினார். நான்கு வருடங்களுக்கொரு முறை நடைபெறும் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஆறு தடவைகள் தொடர்ந்தும் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே அங்கத்தவர்களால் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *