இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்திய யாழ். இளைஞர்கள் மூவர் வசமாக சிக்கினர்!

தெற்காசியாவில் இலங்கையானது போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக விளங்குவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், நேற்று மாலையும் சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான 118 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து குறித்த கேரள கஞ்சாவை படகின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 29 முதல் 32 வயதிற்கு இடைப்பட்ட யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபடுபவர்கள் அல்லது சிறியளவு விற்பனையாளர்கள் கைதுசெய்யப்பட்டாலும் அதனை நாட்டுக்குள் கொண்டுவருபவர்கள், பிரதான விற்பனையாளர்கள் ஆகியோர் இன்னும் கண்டறியப்படாததும், கைதுசெய்யப்படாததும் கவலைக்குரிய விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *