காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்ததைக் கூறுவது அவசியம்! – ஐ.நா. குழு அறிக்கை

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? என்ற உண்மையை அறிவதற்காக அவர்களின் குடும்பத்தவர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குழு தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 39ஆவது அமர்வுக்குச் சமர்ப்பிக்கவுள்ள தனது வருடாந்த அறிக்கையிலே அந்தக் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகம் செயற்பாடுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் குறித்த குழு தனது இலங்கைப் பயணத்தின் பின்னர் முன்வைத்த பரிந்துரைகளை இலங்கை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிவதற்காக அவர்களது உறவினர்கள் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். இந்த விடயம் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கீழ் முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயம். சர்வதேச சட்டங்களின் கீழ் இவற்றை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *