இடைவேளையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த விளையாட்டு வீராங்கனை

கனடாவை சேர்ந்த சேரா ஸ்மால் என்னும் பெண்ணுக்கு எட்டு மாத குழந்தை இருக்கிறது.

அவரோ ஒரு ஹோக்கி பிளேயர்…

சேரா சொல்கிறார்

“ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும் போது மார்பில் பால் கசிவதை உணர முடிந்தது. அதனால் இடைவேளையில் வந்து எட்டு மாத குழந்தைக்கு பால் கொடுத்தேன். ஒரு மனிதனாக எனக்கு பிடித்ததையும் செய்து குழந்தைக்கு பாலும் கொடுக்கும் செயலை செய்ய எனக்கு பிடித்திருந்தது”

தாய்பால் கொடுப்பதற்காக நமக்கு பிடித்த வேலையை செய்யாமல் இருக்க தேவையில்லை.

எதையும் தியாகம் செய்ய தேவையில்லை.

தனிமனித விருப்பத்தையும் தாய்பால் கொடுப்பதையும் இரண்டையுமே செய்து வாழ முடியும் என்ற கான்செப்டில் வெளிநாடுகளில் பல பிரச்சாரங்கள் நடக்கிறது போலிருக்கிறது.

தாய்மை என்பது ஒரு பாரமாக ஒரு பெண்ணின் கேரியரை அமுக்கி விடாமல் இருக்க அங்கே ஆக்கப்பூர்வமாக யோசிக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துகிறார்கள்.

உடனே நம்மூரில் சித்தாள் வேலை செய்து, விவசாய கூலி வேலை செய்து கொண்டே பெண்கள் நடுவில் பால் கொடுக்கத்தானே செய்கிறார்கள் என்று நம்மவர்கள் மேட்டரை சிம்பிளாக முடித்து விடுவார்கள். அது சரியல்ல.

கேரியர் டெலவப்மெண்ட் என்பது அந்த வேலையை செய்யும் போது, செய்வதனால் மேலும் மேலும் அதே துறையில் முன்னேற்றத்தை கொடுக்க கூடியது.

அதற்கான வாய்ப்பு கூலி வேலையில் மிக மிக குறைவே.. ஆகவே அந்த ஒப்பீடு சரியானதல்ல.

இது மாதிரி ஹாக்கி விளையாடிக் கொண்டு நடுவே பால் கொடுப்பதுதான் சரியான முற்போக்கு வாழ்க்கை முறைக்கு எடுத்துக் காட்டாகும்.

இதை ஒரு சமூகமும், தனிமனிதர்களும் ஊக்கப்படுத்துவதுதான் சரியான ஊக்கபப்டுத்துதல் ஆகும்…

”தாய்பால் கொடுப்பதற்காக என் கேரியரை விட்டுக் கொடுத்ததால் என்னால் புராஜெக்ட் மேனேஜர் ஆகமுடியவில்லை” என்பதை தவிர்ப்பதுதான்

இது போன்ற செய்திகளை அங்கே கொண்டாடுவதின் முக்கியமான ஆரோக்கியமான நோக்கமாகும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *