கையடக்க தொலைபேசி பாதிப்பதால் கழுத்து வலி ஏற்படும் அபாயம்!

கையடக்க தொலைபேசி அல்லது லேப்டாப் பயன்படுத்தும் போது நேராக உட்காருமாறு அறிவுறுத்தப்படுவது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கையடக்க தொலைபேசி அல்லது டிவியைப் பார்க்கும் போது தவறான தோரணையானது உங்கள் கழுத்தில் நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும்.

ஒரு வீடியோவில் இதை விளக்கி, கன்டென்ட் கிரியேட்டர் சிவம் அஹ்லாவத், இந்த ஒவ்வொரு தோரணையிலும் கழுத்து எவ்வளவு எடை தாங்குகிறது என்பதைப் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலைகளில் நீண்ட நேரம் தொலைபேசியைப் பார்க்க வேண்டாம்

நேராக உட்கார்ந்து அல்லது 0 டிகிரி – கழுத்து 5 கிலோ எடையைத் தாங்கும்

15 டிகிரியில் – கழுத்து 12 கிலோ எடையைத் தாங்கும்

30 டிகிரியில் – கழுத்து 18 கிலோ எடையைத் தாங்கும்

45 டிகிரியில் – கழுத்து 22 கிலோ எடையைத் தாங்கும்

60 டிகிரியில் – கழுத்து 27 கிலோ எடையைத் தாங்கும்

உங்கள் ஃபோனைப் பயன்படுத்தும் போது இந்த கோணங்களை தவிர்க்கவும். இது செர்விகல் மற்றும் கழுத்து வலியை ஏற்படுத்தும், என்று அஹ்லாவத் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் என்ன பரிந்துரைக்கிறார்

செர்விகல் முதுகெலும்பின் (cervical spine) சிக்கலான உயிரியக்கவியலைப் புரிந்து கொள்வது, வெவ்வேறு கழுத்து கோணங்களில் அழுத்தம் எவ்வாறு மாறும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, என்றார் டாக்டர் அகிலேஷ் யாதவ். (associate director, orthopaedics and joint replacement, Max Hospital, Vaishali)

அதன் நியூட்ரல் நிலையில், தலையின் எடை செர்விகல் முதுகெலும்புகள், இன்டர்வெர்டெபிரல் டிஸ்க்குகள் மற்றும் தசைகள் ஆகியவற்றுடன் ஒரே மாதிரியாக சிதறடிக்கப்படுகிறது , இது உள் அழுத்தத்தைக் குறைக்கிறது.

இருப்பினும், நீண்ட நேரம் ஸ்கீரின் பார்க்கும் போது கழுத்து முன்னோக்கி வளைந்து இருந்தால், ஈர்ப்பு விசைகள் தலையின் எடையை அதிகரிக்கின்றன, கழுத்தின் கட்டமைப்புகளில் அழுத்தத்தை தீவிரப்படுத்துகின்றன.

இந்த அதிகரித்த அழுத்தம் தசைகள், தசைநார்கள் மற்றும் டிஸ்க்குகளை கஷ்டப்படுத்துகிறது, இது காலப்போக்கில் அசௌகரியம், விறைப்பு மற்றும் கட்டமைப்பு சேதத்திற்கு வழிவகுக்கும், என்று டாக்டர் யாதவ் கூறினார்.

மறுபுறம், நல்ல தோரணையை வைத்திருப்பது, தலை எடையின் சீரான விநியோகத்தை ஊக்குவிக்கிறது, செர்விகல் முதுகுத்தண்டில் அதிக அழுத்தம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

நோயாளிகள் அடிக்கடி தலைவலி, கழுத்து வலி, விறைப்பு குறித்து புகார் கூறுகின்றனர். இந்த அறிகுறிகள் பொதுவாக நீடித்த மோசமான தோரணை அல்லது மீண்டும் மீண்டும் அழுத்துவதன் விளைவாகும் என்று டாக்டர் யாதவ் கூறினார்.

என்ன உதவ முடியும்?

தோரணை மற்றும் பணிச்சூழலியல் கல்வி (ergonomic education), வலுவான துணை தசைகளை உருவாக்க கவனம் செலுத்தும் உடல் சிகிச்சை மற்றும் ஹீட் அல்லது ஐஸ் தெரபி போன்ற அறிகுறி மேலாண்மை நுட்பங்கள் உதவும்.

தோரணையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது, நீண்ட கால முதுகெலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் தசைக்கூட்டு பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது, என்று டாக்டர் யாதவ் கூறினார்.

நன்றி – indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *