ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கி கௌரவித்த UAE

 

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அபுதாபி அரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா (UAE Golden Visa) வழங்கி கௌரவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள DCT தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் அபுதாபி நிர்வாகக் குழு உறுப்பினரும், அபுதாபி அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (DCT) தலைவருமான முகமது கலீஃபா அல் முபாரக், ரஜினிகாந்துக்கு எமிரேட்ஸ் ஐடியை வழங்கினார்.

LULU குழுமத்தின் தலைவரும், அபுதாபி சேம்பர் துணைத் தலைவருமான எம்.ஏ.யூசுப் அலியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இது குறித்து பேசிய ரஜினி, அபுதாபி அரசிடம் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா பெற்றதில் பெருமை கொள்கிறேன். அபுதாபி அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி. அனைத்து உதவிகளையும் செய்து என்னுடன் இருந்த நண்பர் எம்.ஏ.யூசப்லிக்கும் நன்றி என ரஜினிகாந்த் கூறினார்.

அபுதாபியில் உள்ள அரண்மனைக்கு கேபினட் உறுப்பினரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சருமான ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானையும் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார்.

விழா முடிந்ததும், அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள BAPS இந்து கோவில் மற்றும் ஷேக் சயீத் பாரிய மசூதியை பார்வையிட்டார்.

ரஜினிகாந்த் தனது புதிய படமான வேட்டையன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அபுதாபி சென்றார்.

சமீபத்தில், ரஜினி அபுதாபியில் யூசபாலியுடன் Rolls Royce-ல் பயணம் செய்யும் காணொளி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *