கைது செய்யப்பட்ட ISIS சந்தேக நபர்களில் பொட்ட நௌபரின் மகன்!

 

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இலங்கையர்களில் ஒருவர், பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான மொஹமட் நௌபர் எனும் (பொட்ட நௌபர்) மகன் என இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 27 வயதான மொஹமட் நஃப்ரான் அவர் எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் நீர்கொழும்பில் வசிப்பவர் எனவும் ஏனையவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் எனவும் இலங்கையின் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

33 வயதான மொஹமட் நுஸ்ரத், பெரியமுல்லை நீர்கொழும்பு
27 வயதான மொஹமட் நஃப்ரான், கிராண்ட்பாஸ் கொழும்பு
35 வயதான மொஹமட் பாரிஷ் மாளிகாவத்தை கொழும்பு
43 வயதான மொஹமட் ரஸ்டீன் கொழும்பு -13
இவர்களே இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த நான்கு பேர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரத்தியேக விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *