இலங்கை வந்தடைந்த Silver Could பயணிகள் கப்பல்!

Silver Could அதி சொகுசு பயணிகள் கப்பல் நேற்று (15) அதிகாலை 2.30 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

சுமர் 600 பயணிகளைக் கொண்ட Silver Could பயணிகள் கப்பலானது நேற்று பி.ப. 6 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து இன்று (16) அதிகாலை 6 மணிக்கு காலி துறைமுகத்தை வந்தடைந்தது.

தரிப்பிட வசதிகருதி சுமார் 1.5 மைல் தூரத்தில் காலி துறைமுகத்திலிருந்து தரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கப்பலானது இன்று மாலை 6 மணிக்கு போர்ட்ப்ளையாவை நோக்கி பயணமாகவுள்ளது.

குறித்த கப்பல் Colombo Shipping தனியார் நிறுவனம் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *