பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஒரே நேரத்தில் 19 வழக்குகள்

கிரிக்கெட் ஜாம்பவான், முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் சிக்கலில் சிக்கியுள்ளார்.

54 வயதான மைக்கேல் ஸ்லேட்டர் பொலிஸாரால் (Belarus) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்லேட்டர் தனது மனைவிக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் பெண்களைப் பின்தொடர்தல் வழக்குகளின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டார்.

இவர் மீது ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கோஸ்ட்டைச் சேர்ந்த ஸ்லேட்டர், டிசம்பர் 5, 2023 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் 12 வரை பல குற்றங்களைச் செய்ததாக்க கூறப்படுகிறது.

இந்த முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் மீது வீட்டு வன்முறை, மிரட்டல், திருட்டு, உடல் ரீதியான தாக்குதல் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஸ்லேட்டருக்கு பலமுறை நீதிமன்ற உத்தரவுகளை மீறிய வரலாறும் உண்டு. அவர் பிடிவாத குணம் கொண்டவர் என்றும், ஜாமீன் விதிகளை மீறியதற்கான பதிவுகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தொலைக்காட்சி வர்ணனையாளர்
Ashes சுற்றுப்பயணத்தில் ஸ்லேட்டர் அறிமுகமானார். 1993ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

Ex-Australia cricketer Michael Slater remanded, Michael Slater in police custody, IPL Michael Slater, ஒரே நேரத்தில் 19 வழக்குகள்., பொலிஸ் காவலில் கிரிக்கெட் ஜாம்பவான்

தொடக்க ஆட்டக்காரரான ஸ்லேட்டர், தனது வாழ்க்கையில் 74 டெஸ்ட் மற்றும் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 42.83 சராசரியில் 5,312 ஓட்டங்கள் எடுத்தார்.

ஸ்லேட்டர் 2004-இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், பின்னர் தொலைக்காட்சி வர்ணனையாளரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *