பிரபல நடிகர் 48 ஆவது வயதில் திடீர் மரணம்!
பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
48 வயதில் டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளது திரையுலகில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பிற்கு இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் உள்ளிட்ட பிரபலங்கள் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அதிதி ராவை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் சித்தார்த்
நடிகை அதிதி ராவை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் சித்தார்த்
நடிகர் முரளியின் உறவினரான டேனியல் பாலாஜி, 2000ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘சித்தி’ தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
அவர் ஏற்று நடித்திருந்த டேனியல் எனும் கதாபாத்திரம் புகழ்பெறவே T.C.பாலாஜி, ”டேனியல் பாலாஜி” ஆக மாறினார்.
அதனைத் தொடர்ந்து 2002யில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படம் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார்.
கமல்ஹாசனுக்கு வில்லன்
பின்னர் காக்க காக்க படம் மூலம் கவனம் ஈர்த்த டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து மிரட்டினார்.
அடுத்து பொல்லாதவன், பைரவா, பிகில், வட சென்னை, மாயவன் ஆகிய படங்களில் நடித்து தன்னை வில்லன் கதாபாத்திரமாக நிலைநிறுத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் இவர் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.