பயிற்சி முடிந்து சென்ற உலக சாதனையாளர் விபத்தில் அகால மரணம்

கென்ய ஓட்டப்பந்தய வீரர் கெல்வின் கிப்டம் சாலையில் விபத்தில் பரிதாபமாக பலியானார்.

ஆஃப்ரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் கெல்வின் கிப்டம் (Kelvin Kiptum).

24 வயதான இவர் சிகாகோவில் நடந்த மாரத்தான் போட்டியில் பந்தய தூரத்தை 2 மணி 35 வினாடிகளில் (42 கிலோ மீற்றர்) கடந்து உலக சாதனை படைத்தார்.

Kelvin Kiptum, Kenya @Michael Reaves/Getty Images

ஸ்பெயின், லண்டன் மாரத்தான் போட்டிகளிலும் முதலிடம் பிடித்து சாதித்த கெல்வின், வரும் சூலை, ஆகத்து மாதம் பாரிசிஸ் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கென்யாவில் இரவு பயிற்சியை முடித்துவிட்டு கெல்வின் தனது பயிற்சியாளர் மற்றும் பெண்ணொருவருடன் காரில் வீட்டுக்கு சென்றார்.

அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார், கால்வாயில் இறங்கி பின் மரத்தில் அதிவேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கெல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயிற்சியாளரும் பலியாக, குறித்த பெண் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கெல்வின் கிப்டமின் மரணம் கென்யாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் உலக தடகள சங்க தலைவர் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *