எகிப்து மன்னர்களும், பெண்களும் கடினமான படுக்கை, தலையணைகளை பயன்படுத்தியது ஏன்?

ஸ்காட்லாந்து நாட்டு தீவான ஓர்க்னியின் மேற்குக் கரையில், ஸ்கைல் விரிகுடாவின் நிலப்பரப்புகளில் தான், பழங்கால கிராமமான ஸ்காரா ப்ரே(Skara Brae) உள்ளது. சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட ஒரு பெரிய அறை கொண்ட இந்த வீடுகளை சுற்றிலும் தடிமனான சுவர்களில் புல் படுக்கை போர்த்தப்பட்டு, கல் பாதைகளுடன் இருக்கும்.

ஆனால், இங்கு ஒவ்வொரு வீட்டின் உள்ளிருக்கும் இரண்டு பொருட்கள், தற்போதைய காலத்திற்கு நன்கு தெரிந்தவையாக இருந்தன – அவை படுக்கைகள்.

ஸ்காட்லாந்தின் வடக்கே உள்ள ஸ்காரா ப்ரேயில் இருக்கும் குடியிருப்புகளில் சுமார் 40 சதுர மீட்டர் (430 சதுர அடி) அறை, பொது அடுப்பு மற்றும் தொல்பழங்கால சாமான்கள் என பெரும்பாலும் ஒரே அமைப்பைக் கொண்டிருந்தன.

சேமிப்பு பெட்டிகள் மற்றும் அலமாரிகளுடன் இருக்கும் டிரஸ்ஸிங் டேபிள்களுடன் சேர்த்து ஒரு மனிதனின் உயரத்திற்கு ஏற்ப இரண்டு செவ்வக வடிவிலான இருக்கைகள் இருந்தன.

மரங்களே இல்லாத இந்த தீவில் இருக்கும் பிற பெரும்பாலான பொருட்களைப் போலவே, இந்த தொல்பழங்கால படுக்கைகளும் குளிர்ந்த, வலுவான கற்பலகைகளால் செய்யப்பட்டவை.

அதில் தலை வைப்பதற்காக உயர்த்தப்பட்டு இருக்கும் அமைப்புகளை கண்டு அவை படுக்கைகள் தான் என்று உடனடியாக அடையாளம் கண்டுவிடலாம்.

அதில் சிலவற்றில் காணப்படும் பழங்கால கல்வெட்டெழுத்துக்கள் மற்றும் அதன் கீழே வைக்கப்படும் எலும்புக்கூடுகள் கொண்டு அவை சுமார் 21 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நாம் நினைக்க வாய்ப்புள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள், படுக்கைகளை உருவாக்கி வருகின்றனர். சேர்ந்த கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் பிரையன் ஃபேகன் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் நாடியா துரானி ஆகியோர், ஆரம்பத்திலிருந்து இதன் வளர்ச்சியை ‘What we did in bed: a horizontal history’ என்ற புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளனர்.

  • பெரும்பாலும் எல்லா உயிரினங்களும் மென்மையான, பூச்சி-எதிர்ப்பு இலைகள் போன்றவற்றை குவியல்களாக்கி தங்களது படுக்கைகளாக பயன்படுத்தி இருக்கின்றனர். பின்னர் முதல் முறையான படுக்கை அமைப்புகள் தோன்ற ஆரம்பித்தன.

ஸ்கரா ப்ரேவில் உள்ள மணற்படுக்கைகள் மற்றும் ஸ்டோன்ஹெஞ்ச் அருகேயுள்ள டுரிங்க்டன் சுவர்களும் உலகின் பழமையான மணல் சுவடுகளுள் ஒன்றாகும். (ஸ்டோன்ஹென்ஜ் அருகேயுள்ள டுரிங்க்டன் சுவர்கள் – நினைவுச்சின்னத்தை கட்டியவர்கள் ஒரு காலத்தில் படுத்துறங்கிய நீண்ட காலமாக மறந்துபோன மரப்படுக்கைகள்)

படுக்கைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, எழுத்து போன்ற பல முன்னோடி கண்டுபிடிப்புகளுக்கு பிறகு தோன்றன.

மால்டாவில் உள்ள ஓர்க்னியில் இருந்து சுமார் 1,700 மைல்கள் (2,735 கிமீ) தொலைவில், அடக்கம் செய்யப்படும் குழிகளில் உள்ள படுக்கைகள், – குறிப்பாக தனது கையை தலைக்கு வைத்து, ஒரு பக்கமாக படுத்துறங்குவது போல் இருக்கும் பெண்ணின் களிமண் உருவம் உட்பட – இது போன்ற சாமான்கள் பழங்காலத்தில் படுக்கைகள் இருந்ததற்கான ஆதாரமாக இருக்கின்றன.

ஆரம்ப காலத்தில் இந்த படுக்கைகள் ஓய்வெடுக்கும் இடங்கள் மட்டுமல்ல. அது பெரும்பாலும் குறியீட்டு அர்த்தங்களையும், மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கைக்கான இணைப்புகளையும் உணர்த்துவதாக இருந்தன என்று ஃபகன் மற்றும் துரானி குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், படுக்கைகள் மக்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைக்கேற்ப பல வகையாக மாறியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இருந்த படுக்கைகள் குறித்த வரலாற்றை இக்கட்டுரையில் காணலாம்.

உறங்கும் மேடைகள்

பண்டைய எகிப்தில் இருந்த உறங்கும் மேடைகள்

ஹோவர்ட் கார்டர், 1922 ஆம் ஆண்டில் மன்னர் துட்டன்காமுனின் கல்லறைக்குள் நுழைந்தபோது, ஆறு படுக்கைகள் உட்பட பளபளப்பாக தங்கத்தால் ஆன பல பொருட்களை அவர் கண்டார்.

பசுக்களின் தெய்வமான மெஹெத்-வெரெட் போல அலங்கரிக்கப்பட்ட இறுதி சடங்கு படுக்கையும், சரிவாக இருக்கும் ஒரு மரப்படுக்கையும், பயணத்தின்போது பயன்படுத்தப்படும் மடிக்கக்கூடிய படுக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் அங்கு இருந்தன.

பெரும்பாலான பண்டைய எகிப்திய படுக்கைகள் செல்வந்தர்களுக்காக உருவாக்கப்பட்டவை. அரசர் துட்டன்காமுனின் படுக்கைகளில் பெரும்பாலும் ஒரு மரச்சட்டமும், கயிறு அல்லது சாரத்தினால் நெய்யப்பட்ட அடித்தளமும் இருக்கும்.

அன்றைய வழக்கப்படி, அரசர்கள் இரவில் ஒரு மென்மையான தலையணைக்கு பதிலாக கடினமான, உயர்த்தப்பட்ட மேடையில் தான் தலை வைத்து உறங்கவேண்டும்.

இந்த முறை காற்றின் சுழற்சியை மேம்படுத்துவதால் இது பெரும்பாலும் வெப்பமான காலத்தில் பயன்படுத்தப்பட்டது. அரசர் துட்டன்காமுனின் பாட்டி உட்பட, பழங்கால எகிப்தியர்கள், தங்களது சுருண்ட கூந்தல், பின்னல்கள் போன்ற சிகை அலங்காரத்தை பாதுகாக்க இந்த வகை படுக்கைகளை பயன்படுத்தினர்.

  • படுக்கை

அனைத்திற்கும் தனி படுக்கைகளை வைத்திருந்த பண்டைய ரோமானியர்கள்

பல சமூகங்களை போலவே பண்டையகால ரோமிலும், மக்கள் உறங்கும் இடங்கள், சமூகத்தில் அவர்களில் நிலையை சார்ந்தே இருக்கும். அடிமைகள் போன்ற சமூகத்தின் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்கள், காய்ந்த இலைகள் , விலங்குகளின் தோல்கள் அல்லது வெறும் தரையில் படுத்துறங்கினர். இதுவே மற்றவர்கள் மிகவும் வசதியாக உறங்கினர்.

2021 ஆம் ஆண்டில், ரோமானிய நகரமான பாம்பீயின் புறநகர்ப் பகுதியான சிவிட்டா கியுலியானாவில் உள்ள ஒரு பழங்கால வில்லாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது சுமார் 2,000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத படுக்கையறையைக் கண்டுபிடித்தனர்.

பாத்திரங்கள், மரப்பெட்டிகள் மற்றும் பல பொருட்களோடு மூன்று படுக்கைகள் அங்கு இருந்தன. அதன் கீழ் எலிகளின் எச்சங்களைக் கொண்ட ஜாடிகள் கூட இருந்தன. அப்படுக்கைகளில் மரக்கட்டங்களுக்கு நடுவே, நெட்டிங் போன்ற மெல்லிய கயிற்றால் கட்டப்பட்ட மெத்தைகள் அல்லது மாறாக தளர்வாக போர்வைகளால் மூடப்பட்டிருந்தன.

மறுபுறம், வசதியான மக்கள் தங்களது பயன்பாட்டும் அதிகமாகவே படுக்கைகள் வைத்திருந்தனர். ரோமானியர்கள் பல்வேறு பயன்களுக்காக பல வகையான படுக்கைகளை கண்டுபிடித்தனர். இதில் படிப்பதற்காக லெக்டஸ் லுகுப்ரேடோரியஸ் (lectus lucubratorius) வகை படுக்கையும் , புதுமணத் தம்பதிகளுக்கான லெக்டஸ் ஜெனியாலிஸ் (lectus genialis) படுக்கையும், மக்கள் கூடி ஓய்வெடுப்பதற்கும் சாப்பிடுவதற்கும் லெக்டஸ் ட்ரிக்லினியாரிஸ் (lectus tricliniaris) படுக்கையும் தூங்குவதற்கு லெக்டஸ் க்யூபிகுலரிஸ்(lectus cubicularis) உட்பட பல்வேறு வகையான படுக்கைகள் இருந்தன.

அவர்கள் இறுதிச் சடங்குகளுக்காக பிரத்யேகமாக படுக்கையையும் வைத்திருந்தனர். பெரும்பாலும் இந்த படுக்கைகளில் உலோகத்தால் செய்யப்பட்ட உயர்ந்த மேடையும் மெல்லிய மெத்தையும் இருக்கும்.

 பண்டைய ரோமானியர்கள்

பட மூலாதாரம்,ALAMY

  • ஒட்டுண்ணி மெத்தைகள்

ஆரம்பகால நவீன ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுண்ணி மெத்தைகள்

17 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பியர்களிடம் பல வகையான படுக்கைகள் இருந்தன. பெட்டி படுக்கைகள், கயிற்றால் கட்டப்பட்ட படுக்கைகள் (இதில் கயிறுகள் தொடர்ந்து இறுக்கப்பட வேண்டும்) மற்றும் 52 பேர் படுத்துறங்கிய கிரேட் பெட் ஆஃப் வேர் (Great Bed of Ware) போன்ற நான்கு சட்டங்கள் இருக்கும் பெரிய படுக்கை போல பல வகைப் படுக்கைகள் இருந்தன. ஆனால் ஆரம்பகால நவீன படுக்கைகளில் இருந்த ஒரு முக்கியமானவை ‘ஒட்டுண்ணி மெத்தைகள்’ ஆகும்

மெத்தைக்கான சாக்குகள் ‘டிக்கிங்’ எனப்படும் முறையால் வலுவான பொருட்கள் கொண்டு இறுக்கமாக நெய்யப்படும். அவை இறகுகள் முதல் வைக்கோல் வரை பலவிதமான பொருட்களால் நிரப்பப்படும்.

இதை நிரப்ப பயன்படுத்தப்படும் பொருட்கள், தூக்கத்தின் தரத்தில் தாக்கம் ஏற்படுத்தும். At Day’s Close: A History of Night time என்ற புத்தகத்தின்படி, 1646 இல் சுவிட்சர்லாந்தின் வழியாகச் சென்ற ஒரு பயணி, இலைகள் நிரப்பப்பட்ட படுக்கையில் உறங்கியதால், இரவு முழுவதும் இலைகள் நொறுங்கும்போது ஏற்பட்ட சத்தம் மற்றும் அவரது தோலில் இலைகள் குத்தியதாக புகார் எழுப்பியுள்ளார்.

இந்த மெத்தைகள் பூச்சிகள் பலவற்றின் இருப்பிடமாக இருந்தன. பழங்காலத்தில் அந்நியர்கள் உட்பட பலபேருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருந்ததால் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

படுக்கை

பட மூலாதாரம்,ALAMY

  • படுக்கை

இங்கிலாந்தில் ஹேங் ஓவர் படுக்கைகள்

19 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் சமத்துவமின்மை உச்சத்தை எட்டியது. தொழில்மயமான பொருளாதாரத்தில், தொழிலாளர் வர்க்கத்தினர் பணம் சம்பாதிக்க போராடினர். இத்துடன் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை சேர்ந்து பல்வேறு மக்கள் வீடற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

லண்டனில், தொண்டு நிறுவனங்கள் சில வழக்கத்திற்கு மாறான தீர்வுகளைக் அறிமுகம் செய்தனர். ஒன்று “நான்கு காசு சவப்பெட்டி” – வரிசையாக சவப்பெட்டி வடிவில் படுக்கைகள் வைக்கப்பட்டு அதில் மக்கள் நான்கு பைசா கொடுத்து இரவில் தூங்கிக்கொள்ளலாம். மற்றொன்று “இரண்டு-பென்னி ஹேங்ஓவர்” என்று அழைக்கப்படும் கயிறு-படுக்கை.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு பெஞ்சில் அமர்ந்து நீண்ட கயிற்றில் தலை சாய்ந்து உறங்குவார்கள். காலையில் மக்கள் தூங்குகிறார்களா என்று பாராமல் அக்கயிறு வெட்டப்படும். “ஹேங்ஓவர்” என்ற வார்த்தையின் தோற்றத்திற்கு இது ஒரு விளக்கமாக இருக்கக்கூடும்.

படுக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருந்தாலும் நிதிநிலையின் மறுமுனையில் இருப்பவர்களுக்கு,உறக்கம் சிறப்பாகவே இருந்தது. 1900-களின் பிற்பகுதியில் ஜெர்மன் கண்டுபிடிப்பாளர் ஒருவர் சுருள்கள் கொண்ட மெத்தைக்கான காப்புரிமையை முதலில் தாக்கல் செய்தார். அதன் பின்னர் தூக்கம் மற்றும் மெத்தைகள் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை.

நுரை படுக்கைகள், நீர் படுக்கைகள், சூடான படுக்கைகள், ஃபுட்டான்கள் (futons), அடுக்கு படுக்கைகள், ஒட்டோமான் படுக்கைகள் என படுக்கைகளில் பல வகைகள் இருக்கின்றன. ஸ்காரா ப்ரேயில் வசிப்பவர்கள் இவற்றை வைத்து என்ன செய்திருப்பார்கள் என்று தான் நாம் யோசிக்க முடியும்.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *