தோப்புக்கரணம் போடுவது ஞாபகசக்தியை அதிகரிக்கும்!

மனிதனுக்கு இறைவனினால் வழங்கப்பட்டுள்ள அற்புதமான சக்திதான் நினைவாற்றலாகும். நல்ல நினைவாற்றல் உள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக திகழ்வான்.

இந் நினைவாற்றல்களைப் பற்றி விஞ்ஞானிகள் கூறும் போது ஒருவர் சரியான விடயத்தை தேவைப்படும்போது வெளிப்படுத்தும் திறமை என குறிப்பிடுகின்றார்கள். அதாவது ஐம்புலங்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைந்து மூளை அவற்றை வகைப்படுத்தி பதிவு செய்து தேவையான போது வெளிப்படுத்துகிறது.

மனிதர்களின் நினைவாற்றல் குறித்து நடந்தப்பட்ட ஆய்வுகளில், ஆண்களைவிட பெண்களே அதிக நினைவாற்றல் கொண்டவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ஆண்கள் எல்லா விஷயத்தையும் எளிதில் மறந்து விடுவார்கள். சம்பவங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள்’ என்கிறது ஆய்வு. இதற்குக் காரணம் பெண்களில் நினைவாற்றலுக்கு காரணமான மூளையின் பகுதியில் அதிக இரத்த ஓட்டம் நிழ்வதாக கூறப்படுகிறது.

இவ்வாறிருக்க மனிதர்களிடையே நினைவாற்றல் குறைவடைவதற்கு முக்கிய காரணிகளாக கருதப்படுபவை 1. போசாக்கின்மை,

  1. மூளைநரம்புகளில் ஏற்படும் சிதைவு, 3. உற்சாகமின்மை.
  2. உடற் பயிற்சியின்மை என்பவற்றைக் பிரதானமாக குறிப்பிடலாம்.
    மேலும் இவற்றுடன்
    ஆர்வமின்மை,
    முயற்சியின்மை,
    தாழ்வு மனப்பான்மை,
    எதிர்மறை எண்ணம்,
    பயம்,
    அதிர்ச்சி,
    மனச்சோர்வு,
    துக்கம்,
    வெறுப்பு
    மனபாதிப்புகள்,
    மன ஒருமையின்மை,
    கவனக்குறைவு,
    தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency),
    கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல்.
    புகை, மது, போதைப் பழக்கங்கள், உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள் என்பன மனிதனின் சிந்திக்கும் திறனை அதிகம் பாதிக்கின்றன.
    இவற்றிற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு ஏற்ற தகுந்த பரிகாரம் செய்வதன் மூலம் ஞாபக சக்தியையும், சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

பாடசாலை காலங்களில் நம்மிடம் ஆசிரியர் கேள்வி கேட்டால் நமது கை தலையைச் சொறியும். அப்போது தலையிலுள்ள நரம்புகள் தூண்டப்பட்டு விடைகள் ஞாபகத்திற்கு வந்துவிடும். இது போல் கேள்விக்கு விடை சொல்லாவிட்டால் ஆசிரியர் தண்டனையாக தோப்புக்கரணம் போடச் செய்வார் அப்போதும் நமது மைய நரம்புத் தொகுதி தூண்டப்பட்டு மூளை புத்தூயுர்ப்படையும். இதனால் தான் ஞாபக சக்தியை அதிகரிக்க தோப்புக்கரணம் போடுவது சிறந்த உடற்பயிற்சி என உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் தோப்புக்கரணம் ஒரு தண்டனையல்லாது உடற்பயிற்சியாக வழங்குவது சிறந்ததாகும்.

NM.Nouzath. BA,
Dip in Counseling, Dip. in Sp. Edu
Psychological Counselor
Samurdhi Social Development Officer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *