விஜய் அரசியல் பிரவேசம்: நாமல் ராஜபக்ச பாராட்டு

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச தமிழக நடிகர்கள் எவரையும் நேரடியாகச் சந்தித்திருக்காத நிலையில் தென்னிந்தியாவின் பிரபல நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருப்பதை பாராட்டியுள்ளார்.

திராவிடம் என்று கூறப்படாத தமிழகத்தை மாத்திரம் முதன்மைப்படுத்தி “தமிழக வெற்றிக் கழகம்“ என்ற கட்சியை விஜய் ஆரம்பித்திருக்கும் பின்னணியில் நாமல் ராஜபக்ச பாராட்டியுள்ளார்.

வழமையாக தென்னிந்திய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் அது சார்ந்த விடயங்களை மையப்படுத்தி நாமல் ராஜபக்ச சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாக இருந்தது.

மேலும் வட இந்திய நடிகர்களுடன் மிகவும் நெருக்கம் காட்டிவரும் நாமல் ராஜபக்ச தென்னிந்திய நடிகர்களுடன் நெருக்கம் காட்டுவது அரிதாகவே இருந்தது.

இப்பின்னணியில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை நாமல் ராஜபக்ச வரவேற்றுள்ளமை பல கேள்கிகளை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *