மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் WhatsApp பயன்படுத்தலாம்

 

மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து வாட்ஸ் அப் Chats-களை, பயனாளர்கள் பயன்படுத்தும் முறையை அந்நிறுவனம் விரைவில் அனுமதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (DMA) முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சீரமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த சட்டத்தின்படி, மூன்றாம் தரப்பு செயலிகளுடன் இணைந்து வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் முறையை உருவாக்கும் முயற்சியில் மெட்டா இறங்கியுள்ளது.

WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, iOSக்கான வாட்ஸ் அப்பின் அண்மைய பீட்டா பதிப்பின் மூலம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி Chatsகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி டெலிகிராம் மற்றும் டிஸ்கார்ட் போன்ற செயலிகளில் இருந்து Chats-களை அணுக பயனர்கள் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வசதி பயனாளர்களிடம் வருங்காலத்தில் நல்ல வரவேற்பை பெறும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *