வீடியோகேம் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனை ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
நீங்கள் அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவராக இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிக சத்தத்துடன் வீடியோ கேம்
பொதுவாக நாம் ஹெட்போன் அணிந்து அப்படியே அதிக நேரம் திரையை பார்த்து வீடியோ கேம் விளையாடினால் நம் கண்கள் பாதிப்பு அடைவதோடு காதுகளும் பாதிப்பு அடையும்.
எப்போதும் ஹெட்போன் அணிந்து வீடியோகேம் விளையாடுவதால் காதிரைச்சல் (Tinnitus) அல்லது கேட்கும் திறன் இழந்து போகும் வாய்ப்பு ஏற்படவுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஹெட்போன் அணிந்து கேம் விளையாடும் போது அனுமதிக்கப்பட்ட சத்தத்தை விட அதிகமான சத்தம் தான் நம் காதுகளுக்கு கேட்டு கொண்டு தான் இருக்கிறது.
இது தொடர்பாக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அப்போது, 20 முதல் 68 சதவிகிதம் இளைஞர்கள் வீடியோ கேம் விளையாடுகின்றனர் என்று தெரியவந்தது. அதில் 60 சதவிகிதத்தினர் கேமிங் செண்டர் சென்று விளையாடுவதாக தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
மேலும், அமெரிக்காவில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அதிக சத்தத்துடன் வீடியோ கேம் விளையாடுவதாக அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, காது கேளாமைக்கும் வீடியோ கேம் விளையாடுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், நிரந்தரமாக அவர்களுக்கு காது கேட்கும் திறன் இழக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.