15 ஆவது ஆண்டு பூர்த்தியை விமரிசையாக கொண்டாடும் GHC Global Education நிறுவனம்

 

நாட்டின் முன்னணி வெளிநாட்டு கல்வி மற்றும் விசா ஆலோசனை சேவை நிறுவனமான GHC Global Education நிறுவனம் அண்மையில் தமது 15 ஆவது ஆண்டு பூர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளது.

துறை சார்ந்த நிபுணர் குழுவொன்றிளால் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந் நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் வெளிநாடொன்றில் தமது உயர் கல்வியை கற்பதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை சேவையினை வழங்குவதாகும். GHC Global Education நிறுவனம் தற்பொழுது அவுஸ்திரேலியா, பின்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

GHC Global Education (www.ghcedu.lk) தொழில்முறை ஆலோசனை, கல்வி பாடநெறிகள், கல்வி நிறுவனங்கள், பொருத்தமான நாட்டை தெரிவு செய்தல், விசாவுக்கு விண்ணப்பித்தல், மாணவர் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் பகுதி நேர தொழில்களை நாடுதல் போன்ற பல்வேறு துறைகளுக்கான ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது.

பின்லாந்து நாட்டின் Metropolia University of Applied Sciences மற்றும் Vaasa University of Applied Science, ஐக்கிய இராச்சியத்தின் Coventry University மற்றும் அவுஸ்திரேலியாவின் Deakin University, Edith Cowan University, James Cook University போன்ற முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் உறவுகளை கொண்டுள்ள GHC Global Education நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளை பெறுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

பின்லாந்து நரட்டில் உயர் கல்வி கற்பதற்கு எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு உதவும் புிரதான கல்வி மற்றும் விசா ஆலோசனை சேவை வழங்குநரான GHC Global Education இலங்கையில் இயங்கும் ஒரே Metropolia University முகவராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வித வயது பேதமின்றி மேற்படி பல்கலைக்கழங்களின் பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென்பதோடு, அதற்காக IELTS அல்லது வேறு எந்தவொரு அங்கில மொழி தகைமையும் கட்டாயமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பம் தொடக்கம் இதுவரையான 15 ஆண்டுகளில் 700 இற்கும் மேற்பட்டோருக்கு வெளிநாட்டுக் கல்விக் கனவை நனவாக்குவதற்கு உதவியுள்ள GHC Global Education நிறுவனம் இலக்கம் 704, நீர்கொழும்பு வீதி, வெலிசற எனும் முகவரியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *