சிவப்பு கட்டணப் பட்டியல் குறித்து மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு!

 

இலங்கை மின்சார சபை 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை வழங்குவது தொடர்பாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது,

இவ்வருடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இயல்பானவை என CEB உறுதியளித்தது.

குறித்த அறிவிப்பில், மின்சாரம் பயன்படுத்திய ஒரு மாதத்தின் பின்னரே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். பெரும்பாலான நுகர்வோர்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்துகின்றார்கள்.

வழமையாக ஒரு மாதத்திற்கான கட்டணம் செலுத்த தவறியதன் பின் சிவப்பு பட்டியல் வழங்கப்படும். சிவப்பு பட்டியல் வழங்கப்பட்ட பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு அறிவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 544,488 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன மற்றும் மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *