கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாதை விமான நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பிரத்தியேக அணுகல் பாதையாக இப் புதிய பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுபாதை திட்டம்

கடந்த நான்கு மாதங்களாக இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளது. கட்டுநாயக்க மற்றும் வெயங்கொட வீதி விரிவாக்கம் திட்டமானது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு இந்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்(படங்கள்) | New Entrance Open Katunayake International Airport

இந்த புதிய பாதையானது, விமான நிலைய பயனாளர்களின் செயற்பாடுகளை இலகுவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை மாற்றுபாதையை பயன்படுத்தி வந்து ஒத்துழைப்பு வழங்கியமைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *