இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டுபிடித்த சவுதி!

 

சவுதி அரேபியா இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டறிந்துள்ளது.

சவுதி அரேபியாவின் தெற்கில் Empty Quarter பகுதியில் அல்-ஹிரான் மற்றும் அல்-மஹாகிக் ஆகிய இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வூதி அரேபிய எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அசிஸ் பின் சல்மான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

சவூதி அராம்கோ (Saudi Aramco) எனப்படும் சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் அல்-ஹிரான்-1 கிணற்றில் உள்ள ஹனிஃபா நீர்த்தேக்கத்தில் முதல் கண்டுபிடிப்பை மேற்கொண்டதாக எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gulf Country, Middle East Country, Saudi Aramco discovers two new natural gas fields, Saudi Arabia discovers two new natural gas fields, இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்களை கண்டுபிடித்த சவுதி அரேபியா!

இரண்டாவது கண்டுபிடிப்பான அல்-மஹாகெக்-2 கிணற்றில் ஒரு நாளைக்கு 0.85 மில்லியன் scf என்ற அளவில் இயற்கை எரிவாயு பாய்ந்தது.

கூடுதலாக, முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட வயல்களில் உள்ள ஐந்து நீர்த்தேக்கங்களிலும் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gulf Country, Middle East Country, Saudi Aramco discovers two new natural gas fields, Saudi Arabia discovers two new natural gas fields, இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்களை கண்டுபிடித்த சவுதி அரேபியா!

சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ, 2021-ஆம் ஆண்டிலிருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் அதன் எரிவாயு உற்பத்தியை 50 சதவிகிதம் உயர்த்த இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை அடைய புதிய எரிவாயு வயல்களின் கண்டுபிடிப்பு உதவும் என்று சவுதி அரசாங்கம் கருதுகிறது.

எரிசக்தி அமைச்சகம் 2030-ஆம் ஆண்டளவில் உள்நாட்டுத் தேவைகளுக்கான எரிவாயுவை முழுமையாகக் கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *