சுவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிய பயன்படுத்தும் அபூர்வ கருவி!

சுவர்களினூடாக உள்ளிருப்பதை கண்டறிவதற்கு வழிவகை செய்யும் செயற்கை மதிநுட்ப ஆற்றலைக் கொண்ட  முறைமையொன்றை இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவமானது படைவீரர்கள் தாக்குதலுக்கு முன்னர் கட்டிடங்களுக்குள் எவராவது உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த இந்த மதிநுட்ப ஆற்றலை பயன்படுத்துகின்றது.

தென் கொரிய குழும நிறுவனமான  எஸ்.கே. குழுமத்தின்  அங்கத்துவ நிறுவனமான கமெரோ  டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட சேவர் 1000  ஆனது தடுப்புச் சுவர்களுக்குப் பின்புறமாகவுள்ளவற்றை கண்டறிவதற்கு உதவுகிறது.

அவ்வாறு கண்டறியப்பட்டவை உபகரணமொன்றில் பொருத்தப்பட்ட திரையில் காட்சிப்படுத்தப்படும்.

மேற்படி சேவர் 1000 உபகரணத்தை பயன்பாட்டாளர்கள் சுவர்களில் நேரடியாக வைத்து அந்த சுவருக்குப் பின்னால் கட்டிடத்திற்குள் எவராவது அமர்ந்து நின்று அல்லது படுத்தவாறு உள்ளார்களா என்பதை  திரையில் துல்லியமாக அவதானிக்க முடியும்.

அத்துடன்  மேற்படி முறைமையானது  கட்டிடத்திற்குள் இருப்பவர் வயது வந்தவரா அல்லது சிறுவரா என்பதைத் தீர்மானிக்க அளவீடுகளை  காண்பிக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது.

இந்த உபகரணத்தை தனிப்பட்ட பயன்பாட்டாளர் ஒருவர் செயற்படுத்த முடியும்.

சேவர் 1000 ஆனது இராணுவத்தினருக்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் மீட்புக் குழுவினருக்கும் உதவக் கூடியதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *