Display இல்லாத smart phone அறிமுகம்!

Display இல்லாத Ai pin ஹைலைட் என்ற ஸ்மார்ட் போன் அறிமுகம்.

அதிநவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது வகையான கண்டுபிடிப்புகள் உலகை ஆக்கிரமித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் போன்களுக்கு மாற்றாக டிஸ்ப்ளே இல்லாத சட்டையில் மாட்டிக் கொள்ளும் வகையிலான போன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த புது வகை ஸ்மார்ட் ஃபோனை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இயங்கும் ஹியூமனி என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த டிஸ்ப்ளே இல்லாத புதிய போனுக்கு ஹியூமேனி Ai pin ஹைலைட்ஸ் கேட்ஜெட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வகை போன் ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக புதிய வடிவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதன் மூலம் போட்டோ எடுக்க, தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள, மெசேஜ் அனுப்பலாம், அதோடு ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Ai pin ஹைலைட்ஸ் cosmos எனும் இயங்கு தளத்தின் மூலம் இந்த சாதனம் இயங்கும். இதை வாய்ஸ் கமெண்ட் மற்றும் சைகைகள் மூலம் செயல்படுத்த முடியும். விர்ச்சுவல் அண்டர்ஸ்டாண்ட் மூலம் மெசேஜ்களை உருவாக்க முடியும். மேலும் உணவுகளை கேமரா வழியாக ஸ்கேன் செய்து அதனுடைய ஊட்டச்சத்துக்களை துல்லியமாக தெரிவிக்கும். தற்போது அமெரிக்காவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய வகை ஸ்மார்ட்போன் விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் தற்போது இந்திய மதிப்பில் இதனுடைய விலை 58 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *