ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு கைதாகிறாரா நடிகை ஜெயப்பிரதா?

 

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300 -க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. இவர் நடிப்பையும் தாண்டி அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர்.

1990 -ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தெலுங்கு தேசக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின், அந்த கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

அப்போது தான் 2004 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றார். இதன் பிறகு 2019 -ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நடிகை ஜெயப்பிரதா மீது 2019- ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஜெயப்பிரதா ஆஜராகாமல் இருந்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை.

இதனால், ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றம் நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. அந்தவகையில், ஜெயப்பிரதா விரைவில் கைதாவார் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *