இளம்பெண் போராளிகளை பணியமர்த்த அதிகளவில் முயற்சிக்கும் ரஷ்யா!

ரஷ்யா பெண் போராளிகளை பணியமர்த்தும் முயற்சிகளை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் Bors பட்டாலியன் சமூக ஊடக தளங்களில் ஒரு விளம்பர பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

குறிப்பாக, பெண்களை குறிவைத்து விளம்பரங்களை ஒரு கணக்கு வெளியிடுவதாக தெரிகிறது. அதாவது, ”Fighting girls” என்று பெயரிடப்பட்ட ஒரு கணக்கு ரஷ்யப் படைகளில் பதிவு செய்து பணியாற்றுமாறு பெண்களை வலியுறுத்துகிறது.

Russia recruites more young women for army Pelagia Tikhonova / Moskva News Agency

இதன்படி, நிபந்தனைகள் – ஒப்பந்த நீளம் மற்றும் ஊதியம் – போர்ஸ் யூனிட் வழங்கும் நிபந்தனைகளுக்கு ஒத்ததாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.

ஒப்பந்தம் செய்யப்படும் பெண்கள் ட்ரோன் ஆபரேட்டர்கள், துப்பாக்கி சுடுவது போன்ற பணிகளுக்காகவும், மருத்துவம் மற்றும் ஓட்டுநராகவும் பணியாற்றுவார்கள்.

தன்னார்வலர்களாக ஆறு மாதங்களுக்குப் பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன் சிறப்புப் பலன்களையும் அவர்கள் பெறலாம். அத்துடன் தங்கள் சேவைகளுக்காக மாதம் 2000 டொலர்கள் வரை சம்பாதிக்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, ரஷ்யப் படைகளில் பெண் போராளிகளின் வலிமை ரஷ்ய ராணுவத்தில் 44,000க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருவதாக பெருமையுடன் அறிவித்தார்.

அத்துடன் அவர்களில் 1,100 பேர் சிறப்பு இராணுவ நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டதாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் சிறப்பு அரச அலங்காரங்களைப் பெற்றதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *