ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் ஏற்படும் ஹமாஸ் எச்சரிக்கை!

 

அமெரிக்காவும் ஒரு நாள் உடையும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. லெபனான் நாட்டு யூ-டியூப் சனலுக்கு அளித்த பேட்டியின்போது ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அலி பராகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் எதிரிகள் அனைவரும்
அமெரிக்காவின் எதிரிகள் அனைவரும் இந்த பகுதியில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நெருங்கி வருகின்றனர். எப்போது, போரில் அமெரிக்கா இணைகிறதோ, அதன்பின் அமெரிக்கா கடந்த கால விசயங்களில் ஒன்றாக மாறிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, சக்தி படைத்த நாடாக தொடர்ந்து இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவை தாக்க கூடிய திறன் வடகொரியாவுக்கு உள்ளது. அவர்களும் எங்களுடைய கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் : ஹமாஸ் எதிர்வு கூறல் | One Day America Will Break Like Russia Hamas

அண்மையில் ஹமாஸ் அமைப்பினர் ரஷ்யாவுக்கு சென்றனர். சீனாவுக்கும் பயணம் செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *