உலகின் TOP 5 விசித்திர ஹோட்டல்களின் பட்டியல்
உலகில் பல நாடுகளில் பல்வேறு வித்தியாசமான உணவகங்கள் இருப்பதை கேள்வி பட்டு இருப்போம் அவற்றில் சிலவற்றை குறித்து இப்போது பார்ப்போம்
அமெரிக்கா:ஹார்ட் அட்டாக் கிரில்
அமெரிக்காவில் உள்ள ஹார்ட் அட்டாக் கிரில் என்ற இந்த உணவகத்தின் டேக்லைன் அனைவரையும் ஈர்க்க கூடியது.
மருத்துவமனையை கருப்பொருளாக கொண்ட இந்த உணவகத்தின் டேக்லைன் “இறப்பிற்கு மதிப்புள்ளது” என்பதாகும்.
இந்த உணவகத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடையணிந்து உணவுகளை பரிமாறுகிறார்கள்.
துபாய்: சில்அவுட் ஐஸ் லவுஞ்ச்
சில்அவுட் ஐஸ் லவுஞ்ச் என்ற பேருக்கு ஏற்றவாறு இந்த உணவகத்தின் வெப்பநிலை ஆறு டிகிரிக்கும் குறைவாக பராமரிக்கப்படுகிறது.
மேலும் இந்த வழங்கப்படும் உணவு வகைகள் முதல் பானங்கள் வரை அனைத்தும் பனியில் வழங்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ்: லபாசின் நீர்வீழ்ச்சி உணவகம்
இந்த உணவகம் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லபாசின் நீர்வீழ்ச்சி உணவகத்தில் மதிய உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகிறது.
தாய்லாந்து: தி குரோட்டோ, ராயவடி
இந்த உணவகம் தாய்லாந்தில் உள்ள ஃபிரானாங் கடற்கரையில் ஒரு சுண்ணாம்பு குகைக்குள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் உட்புறம் காதல் ஜோடிகளுக்கான ஆடம்பரமான ரொமான்டிக் உணவகம் ஒன்றும் உள்ளது.
மாலத்தீவுகள் உணவகம்
ரங்காலி தீவு ரிசார்ட்டில் உள்ள இந்த உணவகம் கடல் மட்டத்திலிருந்து 16 அடிக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தின் தெளிவான கண்ணாடி சுவர்கள் வழியே லட்சக்கணக்கான மீன்களை நேரடியாக கண்டு களிக்கலாம்.