மிகுதி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் குசல் மென்டிஸ் சூளுரை!
உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டுவோம் என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பெரும் தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், தன்னாலும் அணிக்கு எதுவும் நடக்கவில்லை என தான் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்திய அணி சிறப்பாக பந்துவீசியதாகவும், இரவு நேரத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆவதாகவும், இவை எதுவும் சாக்குப்போக்கு இல்லை என்றும் கூறினார்.
இப்போட்டியில் இலங்கை அணி ஏழு போட்டிகளில் பங்கேற்று இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று ஐந்தில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால், எட்டு போனஸ் புள்ளிகளைப் பெற்று சில படிகள் முன்னேற முடியும்.
புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடுகள் தலா எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளதால் இலங்கை அணிக்கு அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.