பாகிஸ்தான் விமான படை மீது தீவிரவாத தாக்குதல்
பாகிஸ்தான் – மியான்வாலி பயிற்சி தளத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது மூன்று விமானங்களும் ஒரு எரிபொருள் டேங்கரும் சேதமடைந்ததாக பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.
குறித்த விமானப்படையின் மீது நேற்று மாலை வேளையில் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் இராணுவம் அதை முறியடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் ஒரு தீவிரவாத குழுவால் மேற்கொள்ளப்பட்மையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் செம்பவம் தொடர்பான அறிக்கையொன்றையும் தற்போது பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்டுள்ளது.
அதில், தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பொலிஸ் வாகனம் அருகே வெடி குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில், குறைந்தது 05 பேர் உயிரிழந்ததுடன் 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் வெய்தி வெளியிட்டுள்ளன.