2023ஆம் ஆண்டுக்கான பிரபல்யமான வார்த்தையாக தெரிவானது

“2023ஆம் ஆண்டுக்கான வார்த்தை” என ‘Artificial Intelligence’ என்ற வார்த்தையை இங்கிலாந்து நாட்டின் காலின்ஸ் அகராதி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரபல ஆங்கில-அமெரிக்க புத்தக பதிப்பகமான ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் (HarperCollins Publishers) இங்கிலாந்து நாட்டின் Glasgow நகரில் உள்ளது .

1817ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிறுவனம் புகழ் பெற்ற காலின்ஸ் அகராதி (Collins Dictionary) எனும் உலக மக்களிடையே மிகவும் பிரபலமான அகராதியை பல மொழிகளில் பதிப்பித்து வருகிறது.

பொது மக்களிடையேயும், பொது மேடைகளிலும், இணைய தளங்களிலும் அதிகம் புழக்கத்தில் உள்ள வார்த்தை எது என ஆண்டுதோறும் “காலின்ஸின் வருடத்திற்கான வார்த்தை” (Collins Word of the year) என கண்டறிந்து வெளியிடுவது வழக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த காலின்ஸ் அகராதி பதிப்பக நிர்வாக இயக்குனர் Alex Beecroft,

” எங்கள் நிபுணர்கள் வானொலி, தொலைக்காட்சி, இணையம், பொதுவெளி உரையாடல்கள் உள்ளிட்ட தளங்களில் இருந்து 20 பில்லியனுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட உள்ளடக்க கருவூலங்களை ஆராய்ந்து இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.

மிக குறுகிய காலத்தில் வளர்ந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த வருடம் AI தான் உலகின் பேசுபொருளாக காணப்பட்டுள்ளது.

நம்மை அறியாமலேயே நமது அன்றாட வாழ்க்கைக்கான சாதனங்களிலும் அது மறைந்துள்ளது. எதிர்கால தொழில்நுட்பங்களிலும் AI நன்றாக இணைந்து விடும்.” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *