2023 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கொண்டுவரப்பட்ட தடை

உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த போட்டிகள் நடைபெறும் நகரங்களில் காற்று மாசு அபாயகரமான அளவில் இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் நடைபெறும் போட்டிகளின் போது பட்டாசு மற்றும் வானவேடிக்கை என்பவற்றை வெடிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தகவல் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

2023 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கொண்டுவரப்பட்ட தடை | Icc Cricket World Cup 2023 India Urgent Decision

இதன்படி டெல்லி மற்றும் மும்பையை மையமாக கொண்டு நடைபெறும் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கீழ் வரும் போட்டிகள் எதிலும் வாணவேடிக்கை வெடிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *