ரஷ்ய படையினரின் வெறிச்செயல் : உறக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 உக்ரைனியர்கள் சுட்டுக்கொலை

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலுள்ள உக்ரைன் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 பேர் உறக்கத்தில் இருந்த நிலையில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைவெறித்தாக்குதலை ரஷ்ய படையினரே நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

உக்ரைன் மீதான போரை அடுத்து உக்ரைனின் கிழக்கே வோல்நோவாகா நகரை கடந்த 2022-ம் ஆண்டு மார்ச்சில் ரஷ்யாவின் கைப்பறியிருந்துது.

இந்த சூழலில், உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியின் வழக்கறிஞர்கள் அலுவலகம் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது. அவற்றில், படுக்கைகளில் பலர் சுடப்பட்டு கிடக்கின்றனர். ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களான அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தபடி காணப்பட்டனர்.அந்த பகுதியில் உள்ள சுவர்களில் இரத்தக்கறை படிந்து காணப்பட்டது.

ரஷ்ய படையினரின் வெறிச்செயல் : உறக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 உக்ரைனியர்கள் சுட்டுக்கொலை | Ukraine 9 Members Same Family Brutally Murdered

இந்த சம்பவத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படைகள் அவர்களை படுகொலை செய்து உள்ளது என உக்ரைன் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்ய வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என ரஷ்ய அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

இராணுவ சீருடையில் ஆயுதங்களுடன் வந்த சிலர்

இராணுவ சீருடையில் ஆயுதங்களுடன் வந்த சிலர், அந்த குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேறுமாறு இந்த மாத தொடக்கத்தில் மிரட்டினர். ஆனால், வீட்டு உரிமையாளர் அதற்கு மறுத்து விட்டார். இதனால், அந்த குடும்பத்தினரை அவர்கள் மிரட்டி, தாக்கி விட்டு தப்பி சென்றனர் என உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியின் வழக்கறிஞர்கள் அலுவலகம் வெளியிட்ட முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

ரஷ்ய படையினரின் வெறிச்செயல் : உறக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 உக்ரைனியர்கள் சுட்டுக்கொலை | Ukraine 9 Members Same Family Brutally Murdered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *