இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.

புனேவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் Pathum Nissanka அதிகபட்சமாக 46 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Fazalhaq Farooqi 4 விக்கெட்டுக்களையும் Mujeeb Ur Rahman 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி 242 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களையும் இழப்பிற்கு 242 என்ற இலக்கை அடைந்து வெற்றியை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Azmatullah Omarzai ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 73 ஓட்டங்களையும், Rahmat Shah 62 ஓட்டங்களையும், Hashmatullah Shahidi 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Dilshan Madushanka 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *